Thursday, August 28, 2008

என்னைத் தாலாட்ட வருவாளா? காதலுக்கு மரியாதை

விஜய், ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் இருந்து என்னைத் தாலாட்ட வருவாளா பாடல்
3GP வடிவில் பதிவிறக்க
http://www.ziddu.com/downloadlink/1929467/enaithalatta.3gp

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
(என்னை தாலாட்ட)

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
(என்னை தாலாட்ட)

படம்: காதலுக்கு மரியாதை
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: பழனி பாரதி

ஏதோ ஒரு பாட்டு - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

கார்த்திக், ரோஜா நடித்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் வரும் ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேக்கும் என்ற பாடல்]

3GP வடிவில் பதிவிறக்க

http://www.ziddu.com/downloadlink/1929464/Ethoorupaattu.3gp


ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
(ஏதோ..)

என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாவகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தேனூற்றும் ஞாபகங்கள் தீமூட்டும்
(ஏதோ..)

அம்மா கை கோர்த்து நடை பழகிய ஞாபகமே
தனியாய் நடைப்பழகி நான் தொலைந்தது ஞாபகமே
புத்தகம் நடுவில் மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
சின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
(ஏதோ..)

ரயில் பயணத்தில் மரம் நகர்ந்தது ஞாபகமே
சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே
காகிதக் கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே
கட்டபொம்மனின் கதையைக் கேட்ட ஞாபகம்
அட்டைக் கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்
(ஏதோ..)

படம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
இசை: S.A. ராஜ்குமார்
பாடியவர்: சுஜாதா

கண்ணே! கலைமானே! - மூன்றாம் பிறை

கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்தில் வரும் கண்ணே! கலைமானே! பாடல்

3GP வடிவில் பதிவிறக்க
http://www.ziddu.com/downloadlink/1929465/kannekalaimane.3gp

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

(கண்ணே)

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

(கண்ணே)

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

(கண்ணே)



இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
குரல்: K.J.ஜேசுதாஸ்

காற்றில் எந்தன் தீபம்... ஜானி

ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ஜானி படத்தில் இருந்து காற்றில் எந்த தீபம் என்ற பாடல்

3GP வடிவில் பதிவிறக்க
http://www.ziddu.com/downloadlink/1929466/Kaatrilenthan.3gp






காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே


எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சம் காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்
நெஞ்சின் தாபம் ஏயும் ஏற்றும்

(காற்றில் எந்தன் கீதம்)

நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்

மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் இங்கே நெஞ்சம் தேடும்


(காற்றில் எந்தன் கீதம்)


படம்: ஜானி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி

Friday, August 15, 2008

இது ஒரு பொன்மாலைப் பொழுது..நிழல்கள்

இது ஒரு பொன் மாலைப் பொழுது
படம் : நிழல்கள்
இசை : இளையராஜா
பாடல் : வைரமுத்து
பாடியது : SPB



http://www.ziddu.com/download/1929463/Ponmalai.3gp.html

பொன்மாலைப்பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

அழகு மலராட அபிநயங்கள் சூட - வைதேகி காத்திருந்தாள்



http://www.ziddu.com/downloadlink/1929170/Alagumalarada.3gp



அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்

ஆஆ...
ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
பதிலேதும் இல்லாத கேள்வி

அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்

ஆஆ...
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
வேறென்ன நான் செய்த பாவம்

அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்