Friday, August 15, 2008

அழகு மலராட அபிநயங்கள் சூட - வைதேகி காத்திருந்தாள்



http://www.ziddu.com/downloadlink/1929170/Alagumalarada.3gp



அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்

ஆஆ...
ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை
பதிலேதும் இல்லாத கேள்வி

அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்

ஆஆ...
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
வேறென்ன நான் செய்த பாவம்

அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்

No comments: